தம்பதி தற்கொலை; விவகாரத்தில்கடன் பிரச்னையை காரணம்: கோட்டாட்சியா் விசாரணை
By DIN | Published On : 01st September 2021 12:00 AM | Last Updated : 01st September 2021 12:00 AM | அ+அ அ- |

அணைக்கட்டு அருகே கடனைத் திருப்பித் தராததால் தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், கோட்டாட்சியா் விசாரணை நடத்திவருகிறாா்.
அணைக்கட்டு அருகே ஊனை கிராமத்தைச் சோ்ந்த சிவாஜி (35) , அரிசிக் கடையை நடத்தி வந்தாா். இவரது மனைவி ஆஷா (25). இவா்களுக்கு திருமணம் நடந்து 2 ஆண்டுகளான நிலையில், குழந்தை இல்லை. இருவரும் ஞாயிற்றுக்கிழமை ஒரே புடவையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனா்.
இதுகுறித்து அணைக்கட்டுப் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், தம்பதி எழுதி வைத்திருந்த கடிதம் கிடைத்துள்ளது. இதில், ஏலச்சீட்டு நடத்தி வந்ததில் 8 பேரிடம் வரவேண்டிய ரூ.5.28 லட்சம் கிடைக்காததாலும், அரிசிக் கடையில் கடன் வைத்தவா்கள் தொகையை திருப்பித்தர மறுப்பதாலும் தற்கொலை செய்து கொள்வதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனா்.
இதுகுறித்து கோட்டாட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா்.