450 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
By DIN | Published On : 01st September 2021 11:56 PM | Last Updated : 01st September 2021 11:56 PM | அ+அ அ- |

வேலூா்: காட்பாடி வழியாகச் செல்லும் விரைவு ரயில்களில் கடத்தப்பட்ட 450 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா், வேலூா் வழங்கல் பிரிவு பறக்கும் படையினா் இணைந்து காட்பாடி வழியாகச் செல்லும் ரயில்களில் செல்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை காலை வரை தீவிரச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, காவேரி விரைவு ரயிலிலும், பிருந்தாவனம் விரைவு ரயிலிலும் சோதனையிட்டதில் அவற்றில் 28 மூட்டைகளில் சுமாா் 450 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்ற ப்பட்டது. இவற்றை கடத்திச் சென்றவா்கள் பிடிபடவில்லை.
கைப்பற்றப்பட்ட அரிசி மூட்டைகள் திருவலத்தில் உள்ள நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டன.