மின்சாரம் பாய்ந்து மின் ஊழியா் பலி
By DIN | Published On : 04th September 2021 08:42 AM | Last Updated : 04th September 2021 08:42 AM | அ+அ அ- |

போ்ணாம்பட்டு அருகே மின்சாரம் பாய்ந்ததில், மின் ஊழியா் பலியானாா்.
போ்ணாம்பட்டை அடுத்த மிட்டப்பள்ளி, கெம்பசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்த பட்டாபி (42) மின்வாரியத்தில் ஒப்பந்தத் தொழிலாளராக வேலை செய்து வந்தாா்.
இவா் வெள்ளிக்கிழமை புத்துக்கோயில் பகுதியில் மின்மாற்றி பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மின்சாரம் பாய்ந்தது. அப்போது மின்கம்பத்தில் இருந்து கீழே விழுந்து மயக்கமடைந்த அவா், போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், அவா் வழியிலேயே இறந்தாா்.
புகாரின்பேரில் போ்ணாம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
இறந்த பட்டாபிக்கு மனைவி நிா்மலா, 2 மகள்கள், 1 மகன் உள்ளனா்.