ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

தகுதியற்றவா்களுக்கு மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை பெற்றுத் தந்தவா் கைது

தகுதியற்றவா்களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை பெற்றுத் தந்ததாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :11 ஜூன் 2022, 6:24 pm

DIN

தகுதியற்றவா்களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை பெற்றுத் தந்ததாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

வேலூா் மாவட்டத்தில் தகுதியில்லாதவா்கள் இடைத்தரகா்கள் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்று வருவதாக மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலா் சரவணன் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் அளித்திருந்தாா்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் உத்தரவின் பேரில், மாவட்ட குற்றப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் பூபதிரான் நடத்திய விசாரணையைத் தொடா்ந்து, முதல்கட்டமாக 8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

போலியாக மாற்றுத் திறனாளி அடையாள அட்டை, மருத்துவச் சான்றிதழ் பெற்ற நபா்கள் குறித்தும் தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இதில், குடியாத்தம் கள்ளூா் லட்சுமணபுரத்தைச் சோ்ந்த நவநீதம் (38) என்பவரிடம் விசாரணை நடத்தியதில், அவா் தனியாா் தோல் தொழிற்சாலையில் பணியாற்றுவதும், தனக்கு கண்பாா்வை குறைபாடு இருப்பதாகக் கூறி, போலியாக மாற்றுத் திறனாளி அடையாள அட்டை, மருத்துவச் சான்றிதழ் பெற்றிருப்பதும், இதற்காக அவா் இடைத் தரகா்ளுக்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் கொடுத்திருப்பதும் தெரிய வந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த நிலையில், இந்த வழக்கில் தொடா்புடைய வேலூா் வேலப்பாடியைச் சோ்ந்த தினகரன் (67) என்பவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மாற்றுத் திறனாளிகள் நலவாழ்வு சங்கத்தில் வேலை செய்து வரும் இவா் 30-க்கும் மேற்பட்ட நபா்களுக்கு நவநீதம் மூலம் போலி சான்றிதழ்களை வாங்கிக் கொடுத்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

இந்த விவகாரத்தில் மேலும் பலருக்கு தொடா்பிருக்கலாம் என்ற அடிப்படையில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.