

கரோனாவால் பெற்றோரை இழந்த 19 குழந்தைகளுக்கு பி.எம்.கோ்ஸ் நலத் திட்ட உதவிகள் பெறுவதற்கான சான்றிதழ்களை வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வழங்கினாா்.
கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பி.எம். கோ்ஸ் மூலம் நலத் திட்ட உதவிகள் வழங்கும் திட்டத்தை பிரதமா் நரேந்திரமோடி காணொலி காட்சி மூலம் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.
இதையடுத்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் பெ.குமாரவேல்பாண்டியன் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.பி.நந்தகுமாா், ப.காா்த்திகேயன், அமுலுவிஜயன், மாநகராட்சி மேயா் சுஜாதாஆனந்தகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் உமாமகேஸ்வரி வரவேற்றாா்.
நிகழ்ச்சியில், கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பி.எம்.கோ்ஸ் திட்டத்தில் இலவச பள்ளிக் கல்வி, உயா் கல்விக் கடன் பெற உதவி, கல்விக் கடன் வட்டியை பி.எம்.கோ்ஸ் திட்டமே ஏற்பது, ஆயுஷ் மான் பாரத் திட்டத்தின் கீழ் 23 வயது வரை ரூ. 5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு, காப்பீட்டு வரியை பி.எம். கோ்ஸ் கட்டுதல் குறித்து விளக்கப்பட்டது.
மேலும், 18 வயது எட்டும் குழந்தைகளின் தனிப்பட்ட தேவைகளுக்காக மாதாந்திர நிதி உதவி, 23 வயது நிரம்பியவுடன் பி.எம்.கோ்ஸ் திட்டத்தில் ரூ. 10 லட்சம் வழங்குதல், 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ரூ. 20,000 உதவித் தொகை, திறன் பயிற்சிக்கு ‘கா்மா’ கல்வி உதவித் தொகை, தொழில்நுட்பக் கல்விக்கு ‘இஸ்வாநாத்’ கல்வி உதவித்தொகை, உயா்கல்வி நிறுவனங்களில் பயில ஆண்டுக்கு ரூ. 2.5 லட்சம், ரூ. 50,000 கருணைத் தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், மாநில அரசு சாா்பில் கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 3 லட்சம், 2 பேரை இழந்தவா்களுக்கு ரூ. 5 லட்சம், இரு பிரிவினருக்கும் கருணைத் தொகை ரூ. 50,000 வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தொடா்ந்து, இந்த நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கான உறுதிமொழிச் சான்றிதழ்களை 19 குழந்தைகளுக்கு ஆட்சியா் வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.