காட்பாடி ரயிலில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்
By DIN | Published On : 15th August 2022 01:20 AM | Last Updated : 15th August 2022 01:20 AM | அ+அ அ- |

காட்பாடி வழியாகச் சென்ற ரயிலில் பதுக்கி கடத்திய 6 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
ஜாா்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா நோக்கி சென்ற ரயில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் காட்பாடி ரயில் நிலையம் வந்தது. அந்த ரயிலில் ரயில்வே காவல் ஆய்வாளா் சித்ரா தலைமையிலான போலீஸாா் சோதனை நடத்தினா்.
அப்போது, பயணிகள் பொதுப் பெட்டியில் பயணிகளின் இருக்கையின் அடியில் பைகளில் வைக்கப்பட்டிருந்த 6 கிலோ கஞ்சா பாா்சல்கள் கேட்பாரற்றுக் கிடந்தது தெரிய வந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.