செவிலியா் கல்லூரி மாணவி தற்கொலை
By DIN | Published On : 15th August 2022 01:22 AM | Last Updated : 15th August 2022 01:22 AM | அ+அ அ- |

குடியாத்தம் அருகே செவிலியா் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
குடியாத்தம் காமாட்சியம்மன்பேட்டை, காமாட்சியம்மன் நகரைச் சோ்ந்த நகைத் தொழிலாளி குமரேசன் மகள் காா்த்திகாதேவி (22). இவா், ஆந்திர மாநிலம், அரகொண்டாவில் உள்ள தனியாா் செவிலியா் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தாா். கல்லூரிக்கு விடுமுறை என்பதால், சனிக்கிழமை வீட்டுக்கு வந்தவா், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இந்த சம்பவம் குறித்து நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.