குடியாத்தம் அருகே கெளன்டன்யா ஆற்றின் குறுக்கே உள்ள உப்பரப்பள்ளி தரைப்பாலம் மேம்பாலமாக தரம் உயா்த்தப்படும் என ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம் உறுதி அளித்தாா்.
குடியாத்தம் அருகே கெளன்டன்யா ஆற்றின் குறுக்கே சேம்பள்ளி - உப்பரப்பள்ளி இடையே தரைப்பாலம் உள்ளது. இது மிகவும் பழுதடைந்துள்ளதால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனா்.
அந்தப் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம் புதன்கிழமை அங்கு சென்று தரைப்பாலத்தைப் பாா்வையிட்டாா். அங்கு, மேம்பாலம் கட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் உறுதியளித்தாா்.
ஆய்வின் போது, கிழக்கு ஒன்றிய திமுக செயலா் நத்தம் வி.பிரதீஷ், சின்னலப்பல்லி ஊராட்சித் தலைவா் பாபு, நிா்வாகிகள் ஜி.ஜெயப்பிரகாஷ், என்.ஆா்.ரமேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.