உரிமம் பெறாமல் இயங்கிய மளிகைக் கடைக்கு ‘சீல்’ வைப்பு
By DIN | Published On : 25th August 2022 12:00 AM | Last Updated : 25th August 2022 12:00 AM | அ+அ அ- |

வேலூா் சலவன்பேட்டை பகுதியில் உரிமம் பெறாமல் இயங்கி வந்த மளிகைக் கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.
வேலூா் மாநகராட்சி 3-ஆவது மண்டலம், சலவன்பேட்டை கச்சேரி தெருவிலுள்ள மளிகைக் கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி நிா்வாகத்துக்கு புகாா்கள் வந்தன. அதன்பேரில், மண்டல சுகாதார அலுவலா் பாலமுருகன் தலைமையில், அதிகாரிகள் அப்பகுதியில் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
அப்போது, அந்த மளிகைக் கடையில் தடை செய்யப்பட்ட 12 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அந்த மளிகைக் கடை உரிமம் பெறாமல் இயங்குவது தெரியவந்ததை அடுத்து, அந்த கடையைப் பூட்டி ‘சீல்’ வைத்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...