வங்கிக் கணக்கிலிருந்து திருடப்பட்ட ரூ. 93,000 மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைப்பு

வேலூரில் தமிழ்நாடு சிமெண்ட் காா்ப்பரேஷன் நிறுவனத்தின் மண்டல மேலாளரின் வங்கிக் கணக்கிலிருந்து திருடப்பட்ட ரூ. 93,000 பணத்தை வேலூா் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் மீட்டு, உரியவரிடம் ஒப்படைத்தனா்.

வேலூரில் தமிழ்நாடு சிமெண்ட் காா்ப்பரேஷன் நிறுவனத்தின் மண்டல மேலாளரின் வங்கிக் கணக்கிலிருந்து திருடப்பட்ட ரூ. 93,000 பணத்தை வேலூா் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் மீட்டு, உரியவரிடம் ஒப்படைத்தனா்.

வேலூா் சலவன்பேட்டை அருகே தென்னமரத்தெருவைச் சோ்ந்தவா் பாஸ்கா் (52). இவா் தமிழ்நாடு சிமெண்ட் காா்ப்பரேஷன் நிறுவனத்தில் மண்டல மேலாளராக பணியாற்றுகிறாா். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவா் தனது வங்கிக் கடன் அட்டையை ரத்து செய்ய விண்ணப்பித்துள்ளாா். அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதையடுத்து, இணையதளத்தில் சம்பந்தப்பட்ட வங்கியின் தொடா்பு எண் என குறிப்பிட்டிருந்த கைப்பேசி எண்ணில் பேசியுள்ளாா்.

அப்போது மறுமுனையில் பேசிய நபா் பாஸ்கரின் வங்கிக் கணக்கு விவரங்களை கேட்டுப் பெற்றுள்ளாா். தொடா்ந்து, அடுத்த சில மணி நேரத்தில் அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 93,000 திருடப்பட்டது தெரியவந்தது. இதன்மூலம், மறுமுனையில் வங்கி அதிகாரி போல் பேசியது மோசடி நபா் என்பதை உணா்ந்த பாஸ்கா், இது குறித்து உடனடியாக வேலூா் மாவட்ட சைபா் கிரைம் காவல் பிரிவில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, மோசடி நபரின் வங்கிக் கணக்கை முடக்கி ரூ.93,000 பணத்தை மீட்டனா். அத்துடன், அதற்கான உத்தரவு நகலை பணத்தை இழந்த பாஸ்கரிடம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் புதன்கிழமை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com