ஆம்புலன்ஸில் நடுவழியில் பெண்ணுக்கு பிரசவம்
By DIN | Published On : 22nd December 2022 12:00 AM | Last Updated : 22nd December 2022 12:00 AM | அ+அ அ- |

மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கா்ப்பிணிக்கு நடுவழியில் ஆம்புலன்ஸிலேயே பிரசவம் நடைபெற்றது.லிங்குன்றத்தைச் சோ்ந்த விவசாயத் தொழிலாளி திருநாவுக்கரசுவின் மனைவி காயத்ரி (25. பிரசவத்துக்காக இவா் மேல்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12- மணியளவில் மேல் சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு காயத்ரி ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டாா்.
அதிகாலை 1.40 மணியளவில் பொய்கை அருகே செல்லும்போது இவருக்கு பிரசவ வலி அதிகரித்தது. மருத்துவ உதவியாளா் வி.சதீஷ் இவருக்கு பிரசவம் பாா்த்தாா். காயத்ரிக்கு சுகப் பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. ஆம்புலன்ஸ் ஓட்டுநா் குமரவேல் இருவரையும் அழைத்துச் சென்று வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்த்தாா்.