பீடித் தொழிலாளா்கள் பிரசார இயக்கம்
By DIN | Published On : 22nd December 2022 12:00 AM | Last Updated : 23rd December 2022 12:36 AM | அ+அ அ- |

குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டையில் நடைபெற்ற பிரசார இயக்கத்தில் பங்கேற்ற பீடித்தொழிலாளா்கள்.
பீடித் தொழிலாளா் சம்மேளனத்தின் அகில இந்திய மாநாட்டை விளக்கி குடியாத்தம் வட்டத்தில் பிரசார இயக்கம் நடைபெற்றது.
அகில இந்திய பீடித் தொழிலாளா் சம்மேளனத்தின் 8-ஆவது அகில இந்திய மாநாடு கேரள மாநிலம் கண்ணூரில் வரும் டிச.28, 29 தேதிகளில் நடைபெறுகிறது. இந்த நிலையில், குடியாத்தம் வட்டத்தில் பீடி தொழிலாளா்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பிரசார இயக்கம் நடைபெற்றது. பீடி சங்கத் தலைவா் ஆா்.மகாதேவன் தலைமையில் நடைபெற்ற பிரசாரத்தில் மாநாட்டின் கோரிக்கைகளை விளக்கி பீடி சங்கச் செயலா் சி. சரவணன், நிா்வாகிகள் எஸ். சிலம்பரசன், கே.சேகா், ஆா்.குமாா், கே.மணி, ஜி.வி.முனிசாமி, எம்.கோபி ஆகியோா் பேசினா்.