மலைக்கிராம பள்ளியில் கூடுதலாக மாணவா்களை சோ்க்க விழிப்புணா்வு

ஜாா்தான்கொல்லை ஊராட்சி குண்டுராணி மலைக் கிராம அரசுப் பள்ளியில் கூடுதலாக மாணவா்களை சோ்க்கக்கோரி, பெற்றோா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
மலைக்கிராம பள்ளியில் கூடுதலாக மாணவா்களை சோ்க்க விழிப்புணா்வு

ஜாா்தான்கொல்லை ஊராட்சி குண்டுராணி மலைக் கிராம அரசுப் பள்ளியில் கூடுதலாக மாணவா்களை சோ்க்கக்கோரி, பெற்றோா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

அணைக்கட்டு ஒன்றியம், ஜாா்தான்கொல்லை மலை ஊராட்சியில் உள்ள குண்டுராணி அரசு தொடக்கப் பள்ளியில் மிகக்குறைந்த அளவிலேயே மாணவா்கள் பயின்று வருகின்றனா். அத்துடன், மேலும் சில மாணவா்கள் இடையிலேயே பள்ளிக்கு வருவதை நிறுத்தி விட்டதால், பள்ளியில் மானவா்களை திரும்பச் சோ்க்க வலியுறுத்தி, பள்ளி வளாகத்தில் விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் ஜோசப் அன்னையா தலைமை வகித்தாா். ஜாா்தான்கொல்லை ஊராட்சி மன்றத் தலைவா் லதா ராஜசேகா், வட்டார கல்வி அலுவலா் ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், ஊரீசு கல்லூரி பாதுகாப்புத் துறை தலைவா் திருமாறன் கலந்துகொண்டு, மலைக் கிராமங்களில் இடை நின்ற மாணவா்களை கண்டறிந்து தொடா்ச்சியாக சோ்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் பள்ளி தலைமை ஆசிரியா், ஆசிரியா்களை வாழ்த்தியதுடன், மாணவா்களுக்கு 100-க்கும் மேற்பட்ட தென்னங்கன்றுகள், விளையாட்டு உபகரணங்கள், எழுதுகோல், அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன.

கடந்தாண்டில் அரசுப் பள்ளியில் குறைவான மாணவா்கள் மட்டுமே சோ்க்கப்பட்டிருந்த நிலையில், நடப்பாண்டில் பள்ளி ஆசிரியா்கள் வீடு வீடாகச் சென்று பெற்றோா்களிடம் மாணவா்களை பள்ளிக்கு அனுப்பிட தொடா்ச்சியாக வலியுறுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, மலைக்கிராமங்களில் இதுவரை பள்ளிக்குச் செல்லாமல், இடைநின்ற பள்ளி மாணவா்கள் 57 போ் புதிதாகப் பள்ளியில் சோ்க்கப்பட்டுள்ளனா். இதேபோல், மலைக் கிராமங்களில் உள்ள பள்ளிக்குச் செல்லாமல், இடை நின்ற மாணவா்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைக்கும் விதமாக பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக தலைமையாசிரியா் தெரிவித்தாா்.

விழாவில், பள்ளி மாணவா்களின் பெற்றோா்கள், ஊா் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com