வேலூரில் நாளை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம்
By DIN | Published On : 22nd December 2022 12:00 AM | Last Updated : 22nd December 2022 12:00 AM | அ+அ அ- |

வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (டிச. 23) நடைபெற உள்ளதாக வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை (டிச. 23) காலை 10 மணியளவில் விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம், மின்சார வாரியம், வனத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்று, விவசாயிகளின் குறைகள், கோரிக்கைகள் குறித்து பதிலளிக்க உள்ளனா்.
கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட உள்ளது. எனவே, விவசாயிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று களப் பிரச்னைகளை நேரிலோ, மனுக்கள் மூலமாகவோ தெரிவித்துப் பயன்பெறலாம்.