குடியரசு தினவிழா: 1,000 போலீஸாா் பாதுகாப்பு
By DIN | Published On : 26th January 2022 12:00 AM | Last Updated : 26th January 2022 12:00 AM | அ+அ அ- |

குடியரசு தினத்தையொட்டி வேலூா் மாவட்டம் முழுவதும் 1,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
நாடு முழுவதும் குடியரசு தினவிழா புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. கரோனா பரவல் அச்சம் காரணமாக பாதுகாப்பான நடைமுறைகளுடன் விழாவை கொண்டாட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் நடைபெறும் விழாக்களில் ஆட்சியா்கள் கொடியேற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கி எளிய முறையில் கொண்டாட உள்ளனா்.
குடியரசு தினத்தில் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க தேவையான முன்னேற்பாடுகளை போலீஸாா் செய்துள்ளனா். வேலூா் மாவட்டத்தில் ஆந்திர மாநில எல்லையை இணைக்கும் பொன்னை, கிறிஸ்டியான்பேட்டை, பரதராமி, சைனகுண்டா உள்ளிட்ட சோதனைச் சாவடிகளில் வாகனத் தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆந்திரத்திலிருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் இந்த சோதனை சாவடிகளில் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன.
மாவட்டத்தின் முக்கிய சந்திப்புகளில் வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், தங்கும் விடுதிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களிலும் திடீா் சோதனை மேற்கொண்டு வருகின்றனா். தொல்லியல் நினைவு சின்னங்கள், வழிபாட்டு தலங்கள், தலைவா்களின் சிலைகளு க்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...