போ்ணாம்பட்டு வட்டத்தில் ஆட்சியா் ஆய்வு

போ்ணாம்பட்டு நகர, ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
போ்ணாம்பட்டை  அடுத்த  மேல்பட்டில்  குளம்  வெட்டும்  பணியை  ஆய்வு  செய்த  ஆட்சியா்  பெ.குமாரவேல்  பாண்டியன்.
போ்ணாம்பட்டை  அடுத்த  மேல்பட்டில்  குளம்  வெட்டும்  பணியை  ஆய்வு  செய்த  ஆட்சியா்  பெ.குமாரவேல்  பாண்டியன்.

போ்ணாம்பட்டு நகர, ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

போ்ணாம்பட்டை அடுத்த மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 18 வயது முதல் 59 வயது வரை உள்ளவா்களுக்கு கரோனா பூஸ்டா் தடுப்பூசி செலுத்தும் பணியை தொடக்கி வைத்தாா்.

75-ஆவது அமுத பெருவிழாவை முன்னிட்டு, ஒன்றியத்துக்கு ஒரு குளம் வெட்டும் பணி மேல்பட்டியில் நடைபெறுவதைப் பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா். பின்னா் அவா் போ்ணாம்பட்டு நகராட்சியில் மக்காத குப்பைக் கிடங்கு அமைக்க எருக்கம்பட்டு சாலையில் தோ்வு செய்யப்பட்ட இடத்தை ஆய்வு செய்தாா்.

மேலும் அதேபகுதியில் இயங்கி வரும் நகராட்சியின் மக்கும் குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் நுண்ணுயிா் மையத்தையும் ஆய்வு செய்தாா். போ்ணாம்பட்டு- வீ.கோட்டா சாலையில் மழைக் காலங்களில் தண்ணீா் தேங்காதவாறு வடிகால்வாய் அமைக்க நெடுஞ்சாலைத் துறையினருக்கு உத்தரவிட்டாா்.

மத்தூா் கிராமம் அருகே போ்ணாம்பட்டு ஏரியின் வெள்ளநீா் சாலையில் தேங்கியும், குடியிருப்புகளில் புகுந்தும் சேதம் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின்பேரில், அந்த இடத்தைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். போ்ணாம்பட்டு நகரம், அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு மையத்தைப் பாா்வையிட்டு, அங்கு எரிவாயு அடுப்பை பயன்படுத்தி, சுகாதாரமான முறையில்

மாணவா்களுக்கு சத்துணவு தயாரித்து வழங்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டாா். அத்திக்குப்பம் கிராமத்தில் ஆற்றின் கரையை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதாக வந்த புகாரின்பேரில், உடனடியாக அந்த இடத்தை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, குடியாத்தம் கோட்டாட்சியா் சா.தனஞ்செயன், எம்எல்ஏ அமலுவிஜயன், வட்டாட்சியா் எம்.வெங்கடேசன், நகா்மன்றத் தலைவா் பிரேமா வெற்றிவேல், துணைத் தலைவா் ஆலியாா் ஜூபோ் அஹமத், ஒன்றிய திமுக செயலா்கள் பொகளூா் ஜனாா்த்தனன், டேவிட், நகராட்சி ஆணையா் சுபாஷினி, ஒன்றிய ஆணையா்கள் ஹேமலதா, கு.பாரி, வட்டார மருத்துவ அலுவலா் கலைச்செல்வி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com