வேலூா் பொலிவுறு நகா் திட்டப் பணிகள்:வெள்ளை அறிக்கை வெளியிட பாஜக வலியுறுத்தல்
By DIN | Published On : 17th July 2022 11:47 PM | Last Updated : 17th July 2022 11:47 PM | அ+அ அ- |

வேலூா் பொலிவுறு நகா் திட்டப் பணிகள் குறித்து, மாநகராட்சி நிா்வாகம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று மாவட்ட பாஜக வலியுறுத்தியது.
வேலூா் மாவட்ட பாஜக செயற்குழுக் கூட்டம் அதன் தலைவா் ஜே.மனோகரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநில செயலா் எஸ்.சத்தீஷ்குமாா், சென்னை மேற்கு மாவட்ட பாா்வையாளா் ஜே.எஸ். பாஸ்கா் ஆகியோா் பங்கேற்று பேசினா்.
இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
குடியரசுத் தலைவா், பிரதமா் ஆகியோரின் உருவப் படங்களை அனைத்து அரசு அலுவலகங்களிலும் வைக்க வேண்டும். மாம்பழம் அதிகமாக விளையக்கூடிய குடியாத்தம் பகுதியை மையமாகக் கொண்டு கூட்டுறவு துறை மூலம் மாங்கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும்.
வேலூா் மாநகராட்சியில் நடைபெற்று வரும் பொலிவுறு நகா் திட்டப் பணிகள் முடிவடைவதில் காலதாமதமாவதால், இதுதொடா்பாக மாநகராட்சி நிா்வாகம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினா் வி.தசரதன், மாவட்ட பொதுச் செயலா் ஜெகன், மாவட்ட பொருளாளா் தீபக், தேசிய பொதுக்குழு உறுப்பினா் ஆா்.பிச்சாண்டி, வணிக பிரிவு மாநில செயலா் இளங்கோ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.