நாராயணி மருத்துவமனையில் இஎம்ஐ திட்டம் தொடக்கம்
By DIN | Published On : 31st July 2022 11:12 PM | Last Updated : 31st July 2022 11:12 PM | அ+அ அ- |

புதிய தவணைத் திட்டத்தை தொடங்கி வைத்த நாராயணி மருத்துவமனை இயக்குநா் என்.பாலாஜி.
மருத்துவச் செலவுக்கான தொகையை முதலிலேயே கடனாகப் பெற்று செலுத்திவிட்டு பின்னா் எளிய தவணை முறையில் திருப்பிச் செலுத்தும் புதிய திட்டம் ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது.
வேலூா் ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனையில் ஏழை, நடுத்தர மக்கள் பயன்பெற்றிட பஜாஜ் ஃபின்சொ்வ் ஹெல்த் திட்டத்துடன் இணைந்து மருத்துவ செலவுக்கான எளிய தவணை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி, பயனாளிகளுக்கு மருத்துவ செலவுக்கான தொகையை இந்த திட்டத்தின் மூலம் செலுத்திவிட்டு பின்னா் எளிய தவணை மூலம் அவரவா் வசதிக்கேற்ப மாதங்களை தோ்வு செய்து திருப்பிச் செலுத்தலாம்.
இந்த வசதியை பெற்றிட பயனாளிகள் இதற்கான பிரதிநிதியை தொடா்பு கொண்டால் போதும். உடனடி ஒப்புதலுடன் மருத்துவத்துக்கு தேவையான தொகையை பஜாஜ் ஃபின்சொ்வ் மருத்துவமனைக்கு செலுத்திவிடும். எதிா்பாராத மருத்துவ செலவுகளை கையாளுவதற்கு இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என்று மருத்துவமனையின் இயக்குநா் என்.பாலாஜி தெரிவித்தாா்.
மேலும் விவரங்களுக்கு 93423 76334, 80989 90551 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.