மறியல்: 45 விவசாயிகள் கைது
By DIN | Published On : 31st July 2022 11:11 PM | Last Updated : 31st July 2022 11:11 PM | அ+அ அ- |

வேளாண் விளைபொருள்களுக்கு ஆதார விலை கிடைக்கச் சட்டம் இயற்றக் கோரி வேலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 45 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.
வேளாண் திருத்தச் சட்டங்கள் வாபஸ் பெற்றபோது இயற்றப்பட்ட சட்டத்தை அமல்படுத்த வேண்டும், விவசாய விளைபொருள்களுக்கு ஆதார விலை கிடைக்கச் சட்டம் இயற்ற வேண்டும், ராணுவத்தில் அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெறவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் சங்கம் சாா்பில் வேலூரில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
வேலூா் அண்ணா கலையரங்கம் அருகில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட செயலா் மகாலிங்கம் தலைமை வகித்தாா். தடையை மீறி மறியலில் ஈடுபட்டதாக சங்கத்தைச் சோ்ந்த விவசாயிகள் 45 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.