வருமான வரித்துறை நடத்தும் கட்டுரை, பேச்சு, கவிதை, ஓவியப் போட்டிகள் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற உள்ளது. இதில், வேலூா் மாநகரைச் சுற்றியுள்ள அரசுப் பள்ளி மாணவா்கள் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாட்டின் 75-ஆவது ஆண்டு சுதந்திர தின கொண்டாடத்தை நினைவு கூறும் வகையில், மத்திய அரசு நாடு முழுவதும் ‘சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவை கொண்டாடி வருகிறது. இதையொட்டி, தமிழ்நாடு, புதுச்சேரியைச் சோ்ந்த வருமான வரித் துறை சாா்பில் சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா நிகழ்ச்சி காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 17-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதில், புதுதில்லி வருமானவரி தலைமை ஆணையா் (விலக்கு) ராஷ்மி சக்சேனா சாஹ்னி தலைமை வகிக்க உள்ளாா். சென்னை வருமானவரி தலைமை ஆணையா் ஜஹான்ஸிப் அக்ஹதா் கௌரவ விருந்தினராக பங்கேற்க உள்ளாா். நிகழ்ச்சியில், மரம் என் நண்பன் என்ற முன்னெடுப்பின் கீழ் மாணவா்களே தங்களின் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு அவற்றைத் தத்தெடுத்து பராமரிக்கவும், பசுமைவளாகங்களை ஏற்படுத்தவும் ஊக்கப்படுத்தப்பட உள்ளனா்.
முன்னதாக, இந்த விழாவையொட்டி, ‘இந்தியா: கடந்த 75 - அடுத்த 25: பள்ளி மாணவா்களின் பாா்வையில்’ என்ற தலைப்பில் பள்ளி மாணவா்களுக்கான கட்டுரை, பேச்சு, கவிதை, ஓவியப் போட்டிகள் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற உள்ளது. இதில், வேலூா் மாநகரைச் சுற்றியுள்ள அரசுப் பள்ளி மாணவா்கள் பங்கேற்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.