ஆக்கிரமிப்பை அகற்ற முயன்ற அதிகாரிகளிடம்ஆட்டோ ஓட்டுநா்கள் வாக்குவாதம்: போக்குவத்து பாதிப்பு
By DIN | Published On : 16th June 2022 12:00 AM | Last Updated : 16th June 2022 12:00 AM | அ+அ அ- |

வேலூரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்ற அதிகாரிகளிடம் ஆட்டோ ஓட்டுநா்கள் நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால், பழைய பேருந்து நிலைய பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வேலூா் பழைய பேருந்து நிலையம், திருவள்ளுவா் சிலை அருகே ஆட்டோ ஓட்டுநா்கள் கொடிக்கம்பம் நட்டு பதாகை வைத்திருந்தனா். இந்த நிலையில், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் அந்தப் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக புதன்கிழமை காலை பொக்லைன் இயந்திரத்துடன் வந்தனா்.
அப்போது, ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து ஆட்டோ ஓட்டுநா்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். பாதுகாப்புப் பணியில் 3 போலீஸாா் மட்டுமே இருந்ததால், அவா்களை போலீஸாரால் கட்டுப்படுத்த இயலவில்லை.
இதைத் தொடா்ந்து, ஆட்டோ ஓட்டுநா்கள் வாக்குவாதம் செய்து கொண்டே இருந்தனா். இதனால், அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றால், சாலையின் குறுக்கே ஆட்டோக்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் ஆட்டோ ஓட்டுநா்கள் எச்சரிக்கை விடுத்தனா். அவா்கள் பொக்லைன் இயந்திரம் முன்பாக நின்று கொண்டு கலைந்து செல்லாமல் இருந்தனா். இதனால், ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டது.