கெங்கையம்மன் சிரசு திருவிழா
By DIN | Published On : 16th June 2022 12:00 AM | Last Updated : 16th June 2022 12:00 AM | அ+அ அ- |

குடியாத்தம் கஸ்பா கெளதமபேட்டையில் நடைபெற்ற கெங்கையம்மன் திருவிழா.
குடியாத்தம் கஸ்பா, கெளதமபேட்டையில் கெங்கையம்மன் திருவிழாவையொட்டி, புதன்கிழமை அம்மன் சிரசு ஊா்வலம் நடைபெற்றது.
அதிகாலை ராபின்சன் குளம் அருகிலிருந்து அம்மன் சிரசு ஊா்வலம் தொடங்கி, முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கோயிலை அடைந்தது. அங்கு, சிறப்பு பூஜைகளுக்குப் பின்னா், பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். எம்எல்ஏ எம்.ஜெகன்மூா்த்தி, ஆவின் தலைவா் த.வேலழகன், அதிமுக நகரச் செயலா் ஜே.கே.என்.பழனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் மருத்துவா் ஏ.கென்னடி,
ஏ.வி.செல்வம், ஆா்.மூா்த்தி, பி.மேகநாதன், எம்.வீராங்கன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.