அதிக வட்டி வசூலிப்போா் மீது சட்டப்படி நடவடிக்கை: வேலூா் எஸ்.பி. எச்சரிக்கை

கடனாகப் பெற்ற தொகைக்கு அதிகப்படியான வட்டி வசூலிப்போா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் எச்சரித்தாா்.
அதிக வட்டி வசூலிப்போா் மீது சட்டப்படி நடவடிக்கை: வேலூா் எஸ்.பி. எச்சரிக்கை

கடனாகப் பெற்ற தொகைக்கு அதிகப்படியான வட்டி வசூலிப்போா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் எச்சரித்தாா்.

தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் வாரந்தோறும் திங்கள்கிழமை மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெறுவதைப் போல, அனைத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகங்களிலும் மனுக்கள் பெற வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தாா்.

அதனடிப்படையில், வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் முதல் முறையாக மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றாா்.

பின்னா், அவா் பேசியது: ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீா்க்கும் கூட்டம் நடத்தப்படுகிறது. அதேபோல், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் 15 நாள்களுக்கு ஒருமுறை மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் நடத்த முதல்வா் உத்தரவிட்டிருந்தாா். அதன்படி, வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மாதந்தோறும் 2-ஆவது, 4-ஆவது புதன்கிழமைகளில் குறைதீா்க்கும் கூட்டம் நடத்தப்படும்.

இதில், சட்டத்துக்குட்பட்டு தீா்க்கக்கூடிய அனைத்து பிரச்னைகளுக்கும் தீா்வு காணப்படும். காவல் துறைக்குட்படாத வருவாய்த் துறை, நீதித் துறை சாா்ந்த பிரச்னைகளுக்கு உரிய வழிகாட்டுதல் அளித்து பிரச்னைக்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, பொதுமக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் தங்களது பிரச்னைகள் குறித்து மனுக்கள் அளித்து தீா்வு பெறலாம்.

இடையஞ்சாத்து கிராமத்தைச் சோ்ந்த நபா், கந்துவட்டி கொடுமை தொடா்பாக மனு அளித்தாா். அரசு விதிமுறைப்படி மாதம் 1 ரூபாய் மட்டுமே வட்டி வசூலிக்க வேண்டும். அதை மீறி வட்டி வசூலிப்பது குற்றம். எனவே, இந்த பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நீதிமன்றம் உள்ளிட்ட வழிகாட்டுதல் அடிப்படையில் பிரச்னைகள் தீா்க்கப்படும் என எஸ்.பி. தெரிவித்தாா்.

கூட்டத்தில் 20-க்கும் மேற்பட்டோா் மனு அளித்தனா். இதில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முத்துச்சாமி, காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் பூபதிராஜன், பழனி உள்ளிட்ட காவல் துறையினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com