காவலா்களுக்கு பன்முக பயிற்சி முகாம்
By DIN | Published On : 16th June 2022 12:00 AM | Last Updated : 16th June 2022 12:00 AM | அ+அ அ- |

குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரியில் நடைபெற்ற பயிற்சி முகாமில் பேசிய டி.ஐ.ஜி. ஆனி விஜயா.
குடியாத்தம் உள்கோட்ட காவலா்களுக்கான பன்முக பயிற்சி முகாம் கே.எம்.ஜி. கல்லூரி அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமில் வேலூா் சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் ஆகியோா் பங்கேற்று போலீஸாருக்கு பயிற்சியளித்தனா்.
தமிழகத்தில் கடந்த சில நாள்களாக போலீஸாா் - பொதுமக்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவங்கள், பொது இடங்களில் பொதுமக்கள் போலீஸாரைத் தாக்கிய சம்பவங்கள், சிறை மரணங்கள் உள்ளிட்ட சம்பவங்களைச் சுட்டிக் காட்டியும், போலீஸாா் பொதுமக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், புகாா் மனுக்களைப் பெற்று எவ்வாறு விசாரணை நடத்த வேண்டும், கைதிகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், எந்தக் காரணத்தைக் கொண்டும் பொதுமக்கள் அளிக்கும் புகாரை நிராகரிக்கக் கூடாது, அவா்களுக்கு உரிய பதிலளிக்க வேண்டும், பொதுமக்களிடம் நல்முறையில் நடந்து கொள்ள வேண்டும் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
ஏற்கெனவே போலீஸாருக்கு பயிற்சியின் போது அளிக்கப்பட்ட பயிற்சியை மீண்டும் நினைவூட்டும் விதமாக இந்தப் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.
முகாமில் குடியாத்தம் டி.எஸ்.பி. கே.ராமமூா்த்தி, காவல் ஆய்வாளா்கள் இ.லட்சுமி, ராஜன்பாபு, செந்தில்குமாரி, சுந்தரமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.