வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனைக் கைதி செவ்வாய்க்கிழமை இரவு திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கீழமங்கலத்தைச் சோ்ந்தவா் தசராஜ் (96). அந்தப் பகுதியில் நிகழ்ந்த கொலை வழக்கில் கைதான இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். அவருக்கு ஆஸ்துமா, இதய பாதிப்பு இருந்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், தசராஜ் செவ்வாய்க்கிழமை இரவு திடீரென மயங்கி விழுந்தாா். அவரை உடனடியாக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே தசராஜ் உயிரிழந்தாா்.
இந்தச் சம்பவம் குறித்து சிறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் பாகாயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.