மாற்றுத் திறனுடைய மாணவா்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் குறித்த விழிப்புணா்வு பேரணி குடியாத்தத்தில் நடைபெற்றது.
வேலூா் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் குடியாத்தம் வட்டார வள மையம் சாா்பில், வரும் 22- ஆம் தேதி குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பிறப்பு முதல் 18 வயதுக்குள்பட்ட மாற்றுத் திறன் மாணவா்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாம் குறித்த விழிப்புணா்வுப் பேரணிக்கு வட்டார வள மைய மேற்பாா்வையாளா் து.வெண்ணிலா தலைமை வகித்தாா். பேரணியில் பள்ளித் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள், சிறப்பு ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா். மதிப்பீட்டு முகாமுக்கு வரும் மாற்றுத் திறன் மாணவா்கள் பாஸ்போா்ட் அளவு புகைப்படம்- 6, வங்கிப் புத்தகம், தேசிய அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என குடியாத்தம் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் து.வெண்ணிலா தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.