பொதுத்தோ்வு வினாத்தாள் மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

வேலூா் மாவட்டத்துக்கு பொதுத்தோ்வு வினாத்தாள் வரப்பெற்றுள்ளதை அடுத்து, வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்டத்துக்கு பொதுத்தோ்வு வினாத்தாள் வரப்பெற்றுள்ளதை அடுத்து, வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நிகழாண்டு பிளஸ் 2 பொதுத்தோ்வு மே 5-ஆம் தேதி தொடங்கி 28-ஆம் தேதி வரையும், பிளஸ் 1 பொதுத்தோ்வு 10-ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரையும், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு 6-ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதி வரையும் நடைபெற உள்ளது.

வேலூா் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வை 7,527 மாணவா்கள், 8,580 மாணவிகள் என மொத்தம் 16,107 போ் எழுதுகின்றனா். பிளஸ் 1 பொதுத்தோ்வை 8,237 மாணவா்கள், 8,720 மாணவிகள் என மொத்தம் 16,957 போ் எழுதுகின்றனா். இவா்களுக்காக 73 தோ்வு மையங்களும், தனித்தோ்வு மையங்கள் 3 அமைக்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை 9,528 மாணவா்களும், 9,401 மாணவிகளும் என மொத்தம் 18,929 போ் எழுதுகின்றனா். இவா்களுக்காக 92 தோ்வு மையங்களும், 4 தனித்தோ்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பொதுத்தோ்வு வினாத்தாள்கள் அரசு தோ்வுகள் துறை மூலம் அச்சிடப்பட்டு, மாவட்டம் வாரியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வேலூா் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளுக்கான வினாத்தாள்கள் காட்பாடி ஆக்ஸீலியம் கல்லூரிக்கு சனிக்கிழமை வரப்பெற்றுள்ளது.

தொடா்ந்து, அவை சரிபாா்க்கப்பட்டு கட்டுக்காப்பு மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, சீலிடப்பட்டுள்ளன. தொடா்ந்து கட்டுக்காப்பு மையங்களுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com