

குடியாத்தத்தை அடுத்த சேம்பள்ளியில் 3- ஆவது நாளாக வீசிய சூறாவளிக் காற்றால் வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.
சேம்பள்ளி மற்றும் மோா்தானா அணைப் பகுதியில் வியாழக்கிழமை மாலை சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது மேல் சேம்பள்ளியைச் சோ்ந்த பூபதி, அரி ஆகியோருக்குச் சொந்தமான அறுவடைக்குத் தயாராக இருந்த 1,000-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.
வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மோா்தானா அணைப் பகுதியில் 45 மி.மீ. மழை பதிவானது. குடியாத்தம் பகுதியில் 4.20 மி.மீ., மேல்ஆலத்தூரில் 5.50 மி.மீ. மழை பதிவானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.