நளினி விடுதலையை பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடிய மக்கள்
By DIN | Published On : 11th November 2022 08:30 PM | Last Updated : 11th November 2022 08:30 PM | அ+அ அ- |

நளினியின் விடுதலை அறிவிப்பையொட்டி பிரம்மபுரம் பகுதியில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் பொதுமக்கள் கொண்டாடினர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 31 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினியை தற்போது உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
வேலூர் பெண்கள் தனி சிறையில் தண்டனை அனுபவித்து வந்த நளினி தனது உடல்நிலையை கருத்தில் கொண்டும் தனது தாயார் பத்மாவதி உடல்நிலையை கருத்தில் கொண்டும் தனக்கு பரோல் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு மனு அளித்திருந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் முறையாக நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.
இதையும் படிக்க- ஜிம்மில் உடற்பயிற்சியின்போது சுருண்டு விழுந்து டிவி நடிகர் பலி
அதனைத் தொடர்ந்து தற்போது பத்தாவது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்ட நளினி காட்பாடி அடுத்த பிரம்மபுரம் பகுதியில் உள்ள வீட்டில் தனது தாய் பத்மாவுடன் தங்கியுள்ளார்.
நளினியின் விடுதலை அறிவிப்பையொட்டி பிரம்மபுரம் பகுதியில் உள்ள பொதுமக்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.