ஆட்சியர் இருக்கையில் அரசுப் பள்ளி மாணவி

அரசுப் பள்ளி மாணவியை தனது இருக்கையில் அமர வைத்து வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கௌரவித்தார்.
ஆட்சியர் இருக்கையில் அரசுப் பள்ளி மாணவி துர்கா லட்சுமி.
ஆட்சியர் இருக்கையில் அரசுப் பள்ளி மாணவி துர்கா லட்சுமி.

அரசுப் பள்ளி மாணவியை தனது இருக்கையில் அமர வைத்து வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கௌரவித்தார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய குழந்தைகள் நாளை முன்னிட்டு செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் வங்கி கணக்கு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். மாணவ, மாணவிகளிடம் தங்கள் குறைகளையும் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் தாங்கள் வருங்காலங்களில் என்ன ஆக வேண்டும் என்று கேட்டார்.

வேலூர் சத்துவாச்சாரி அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் துர்கா லட்சுமி என்ற மாணவி தான் ஐஏஎஸ்-ஆக வேண்டும் என்று கூறினார். மாவட்ட ஆட்சியர் நன்றாக படிக்கும் படி கூறினார். பின்னர் மாணவர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியரிடம் தாங்கள் என்ன ஆக வேண்டும் என்பதை பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி முடிவில் தான் ஐஏஎஸ்-ஆக வேண்டும் என்று கூறிய மாணவி துர்கா லட்சுமியை தன்னுடைய இருக்கையில் அமர வைத்து அழகு பார்த்தார் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்.

இது குறித்து அந்த மாணவி கூறுகையில், என் தந்தை எங்களை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். என்னுடைய அம்மா மிகவும் கஷ்டப்பட்டு வீட்டு வேலைக்கு சென்று என்னை படிக்க வைத்து கொண்டு இருக்கிறார். எங்கள் குடும்பம் வறுமையில் இருந்து வரும் நிலையில் நான் ஐஏஎஸ் கனவோடு படித்து வருகிறேன். நிச்சயமாக ஐஏஎஸ் தேர்வாகி மக்களுக்கு சேவையாற்றுவேன். என்னுடைய அம்மாவின் கனவை நிறைவேற்றுவேன்.

என்னுடைய ஆசையை தெரிந்துகொண்டு என்னை அவருடைய இருக்கையில் அமர வைத்து என்னை மகிழ்ச்சி அடைய செய்த மாவட்ட ஆட்சியருக்கு நன்றி என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com