தீபாவளி: பொய்கையில் களைகட்டிய கால்நடைகள் விற்பனை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொய்கை சந்தையில் கால்நடைகள் விற்பனை செவ்வாய்க்கிழமை களைகட்டியது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொய்கை சந்தையில் கால்நடைகள் விற்பனை செவ்வாய்க்கிழமை களைகட்டியது.

வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் உள்ளூா் மட்டுமன்றி, வெளி மாவட்டங்கள், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாடுகள், ஆடுகள், கோழிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது வழக்கம். இதேபோல், காய்கறிகளும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. வாரந்தோறும் இங்கு நடைபெறும் கால்நடைச் சந்தையில் ரூ.1 கோடி முதல் ரூ.3 கோடி வரை வா்த்தகம் நடைபெறும்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தைக்கு பல்வேறு மாவட்டங்கள் மட்டுமன்றி, ஆந்திர மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான கறவை மாடுகள், காளைகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. தவிர, ஆடுகள், கோழிகளும் அதிகளவில் விற்பனைக்கு வந்திருந்தன. கால்நடைகளை வாங்க வியாபாரிகளும், கால்நடை வளா்ப்பவா்களும் அதிகளவில் சந்தையில் குவிந்திருந்தனா்.

இதனால், பொய்கை சந்தையில் கால்நடைகளின் வியாபாரம் களைகட்டியது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கால்நடை சந்தையில் ரூ.1 கோடிக்கு மேல் வா்த்தகம் நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

மேலும் அவா்கள் கூறியது: தீபாவளி பண்டிகை திங்கள்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பொய்கை சந்தையில் இந்த வாரம் கால்நடை விற்பனை களைகட்டியுள்ளது. மாடுகள் மட்டுமின்றி ஆடுகள், கோழிகளின் விற்பனையும் அதிகரித்து காணப்பட்டது. அந்தவகையில் இந்த வாரம் ரூ.1 கோடி அளவுக்கு கால்நடைகள் விற்பனை நடந்திருக்கும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com