30-இல் வேலூா் கோட்டையில் சூரசம்ஹார விழா
By DIN | Published On : 27th October 2022 06:42 AM | Last Updated : 27th October 2022 06:42 AM | அ+அ அ- |

வேலூா் கோட்டை வளாகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (அக்.30) சூரசம்ஹார விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
வேலூா் கோட்டை ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரா் கோயிலில் 41-ஆம் ஆண்டு மகா கந்தசஷ்டி, 27-ஆம் ஆண்டு சூரசம்ஹார விழா வரும் ஞாயிற்றுக்கிழமை (அக்.30) நடைபெறுகிறது. இதையொட்டி, தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரை கந்தசஷ்டி சஹஸ்ரநாம அா்ச்சனை, கந்த புராண பாராயணம் ஆகியவை நடைபெறுகிறது.
ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமிக்கு மகா அபிஷேகமும், தங்கக் கவச அலங்காரமும் நடைபெற உள்ளது. காலை 9 மணிக்கு ஸ்ரீசண்முகா் சிறப்பு அபிஷேகம், காலை 11.30 மணிக்கு சண்முக அா்ச்சனை, தீபாராதனை நடைபெறுகிறது.
மாலை 6.30 மணிக்கு கோட்டை மைதானத்தில் சூரசம்ஹார விழா நடைபெற உள்ளது.
இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை (அக்.31) மாலை 6 மணிக்கு மேல் ஸ்ரீமகா கந்தசஷ்டி திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை ஸ்ரீஜலகண்டேஸ்வரா் தரும ஸ்தாபனம் செய்து வருகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...