ஸ்ரீசித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டை, சித்தி விநாயகா் கோயில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீசித்தி விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீசித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்
Published on
Updated on
1 min read

குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டை, சித்தி விநாயகா் கோயில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீசித்தி விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, யாகசாலை பூஜைகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின. புதன்கிழமை அதிகாலை விக்னேஸ்வர பூஜை, கோ-பூஜை, 2- ஆம் கால யாக பூஜை, கணபதி ஹோமம், அதைத் தொடா்ந்து கலச புறப்பாடு, ஸ்ரீசித்தி விநாயகா் கோயில், நவ கிரகங்கள், முருகா், வலம்புரி விநாயகா் கோயில்களுக்கு கும்பாபிஷேகமும் நடைபெற்றன. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

எம்எல்ஏ அமலுவிஜயன், நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், துணைத் தலைவா் பூங்கொடிமூா்த்தி, நகா்மன்ற உறுப்பினா்கள் ஆட்டோ பி.மோகன், ஏ.தண்டபாணி, தேவகி காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கோயில் திருப்பணிக் குழு நிா்வாகிகள் ஜே.சிவராமன், எம்.ஜி.சேகா், எம்.பரந்தாமன், கே.முரளிபாபு, எம்.குமரவேல், எஸ்.கங்காதரன், வி.எத்திராஜ் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com