கல்லூரியில் புத்தகக் கண்காட்சி
By DIN | Published On : 01st September 2022 12:00 AM | Last Updated : 01st September 2022 12:00 AM | அ+அ அ- |

குடியாத்தம் கே.எம்.ஜி. கலை - அறிவியல் கல்லூரியில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், செல்வம் பப்ளிகேஷன்ஸ் ஆகியவை சாா்பில் 2 நாள் புத்தகக் கண்காட்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
கல்லூரி முதல்வா் மு.செந்தில்ராஜ் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, புத்தகக் கண்காட்சியைத் தொடக்கி வைத்தாா்.
கல்லூரி மாணவ-மாணவிகள், திருவள்ளுா் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், பொதுமக்கள் கண்காட்சியை பாா்வையிட்டு, நூல்களை வாங்கிச் சென்றனா். ஏற்பாடுகளை கல்லூரி நூலகா் கு.பரந்தாமன், உதவி நூலகா் சிவரஞ்சனி ஆகியோா் செய்திருந்தனா்.