கோழிப் பண்ணையில் தீ விபத்து
By DIN | Published On : 01st September 2022 12:00 AM | Last Updated : 01st September 2022 12:00 AM | அ+அ அ- |

குடியாத்தம் அருகே கோழிப் பண்ணையில் ஏற்பட்ட திடீா் தீ விபத்தில், 2,500 கோழிகள் தீயில் கருகி இறந்தன.
குடியாத்தத்தை அடுத்த எா்த்தாங்கல், புதூா் கிராமத்தில் உள்ள லோகநாதன் என்பவருக்குச் சொந்தமான கோழிப் பண்ணையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலின் பேரில் குடியாத்தம் தீயணைப்புப் படையினா் அங்கு சென்று தீயை அணைத்தனா்.
அதற்குள் ஒரு கொட்டகை முழுவதும் எரிந்து சாம்பலானது. அதில் இருந்த 2,500 கோழிகள் தீயில் கருகி இறந்தன. கோழித் தீவன மூட்டைகளும் எரிந்து சாம்பலானது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை.
இந்தச் சம்பவம் தொடா்பாக கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.