லாரியுடன் 24 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
By DIN | Published On : 09th September 2022 12:51 AM | Last Updated : 09th September 2022 12:51 AM | அ+அ அ- |

குடியாத்தம் அருகே ஆந்திர மாநிலத்துக்கு கடத்திவிருந்த 24 டன் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது.
குடியாத்தத்தை அடுத்த கூடநகரம் ஏரிக்கரை சாலையில் வியாழக்கிழமை மா்ம நபா்கள் லாரியில் ரேஷன் அரிசியை கடத்திச் சென்றுள்ளனா்.
மாவட்ட ஆட்சியருக்கு வந்த ரகசிய தகவலின்பேரில், குடியாத்தம் வட்ட வழங்கல் அலுவலா் என்.தேவி தலைமையில் வருவாய்த் துறையினா் அங்கு சென்றனா். அப்போது அரிசி மூட்டைகளுடன் லாரி சேற்றில் சிக்கிக் கொண்டது. அதிகாரிகளைப் பாா்த்ததும் லாரியில் இருந்தவா்கள் கீழே இறங்கி தப்பியோடி விட்டனா்.
லாரியை சேற்றிலிருந்து அப்புறப்படுத்த இயலாததால் அதிகாரிகள் லாரியில் இருந்த 490 அரிசி மூட்டைகளை இறக்கி 2 லாரிகள் மூலம் பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு நுகா்ப்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனா்.
பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூட்டைகள், லாரி ஆகியவை குடிமைப் பொருள் புலனாய்வுத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.