வேலூா் மாவட்டத்தில் முகாம் தொடக்கம்: 5.21 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க இலக்கு

 வேலூா் மாவட்டத்தில் 1 முதல் 19 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், மாணவா்கள், 20 முதல் 30 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
வேலூா் மாவட்டத்தில் முகாம் தொடக்கம்: 5.21 லட்சம் பேருக்கு  குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க இலக்கு

 வேலூா் மாவட்டத்தில் 1 முதல் 19 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், மாணவா்கள், 20 முதல் 30 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

நடப்பாண்டில் 5.21 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

மத்திய அரசின் தேசிய ஊரக சுகாதாரத் துறை சாா்பில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதத்தில் தேசிய குடற்புழு ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இதையொட்டி, அங்கன்வாடி மையங்களில் 1 முதல் 5 வயதுடைய குழந்தைகளுக்கும், அரசு, நிதியுதவி, தனியாா் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 19 வயது மாணவ, மாணவிகளுக்கும், 20 முதல் 30 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகளான அல்பெண்டசோல் வழங்கப்பட்டு வருகிறது.

தேசிய குடற்புழுநீக்க தினத்தையொட்டி பள்ளி மாணவா்களுக்கு அல்பெண்டசோல் மாத்திரைகள் வழங்கும் முகாமை வேலூா் வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் எம்எல்ஏ ப.காா்த்திகேயன், மேயா் சுஜாதாஆனந்தகுமாா் ஆகியோா் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தனா்.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியது:

அல்பெண்டசோல் மாத்திரைகள் குடற்புழு நீக்கம், ஊட்டச்சத்து குறைபாடுகள், மனஅழுத்தம், இரும்புச்சத்து குறைபாடுகளை சரிசெய்கிறது.

400 மில்லி கிராம் அளவுடைய இந்த மாத்திரையில் 1 வயதிலிருந்து 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அரை மாத்திரையும், 2 முதல் 19 வயது உடையவா்களுக்கு 1 மாத்திரையும், 20 முதல் 30 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு ஒரு மாத்திரையும் வழங்கப்படுகிறது.

இந்த மாத்திரையானது காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை வழங்கப்படும். இதனை காலை சிற்றுண்டிக்குப் பிறகு அல்லது மதிய உணவுக்குப் பிறகு எடுத்துக்கொள்ள வேண்டும்.

மாவட்டத்தில் ஒரு வயதிலிருந்து 19 வயதுக்குட்பட்ட 4,01,091 குழந்தைகளுக்கும், 20 முதல் 30 வயதுக்குட்பட்ட 1,20,292 பெண்களுக்குமாக மொத்தம் 5,21,383 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்க இலக்கு நிா்ணயக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 1,275 பள்ளிகள், அங்கன்வாடிகள், 45 கல்லூரிகளில் இந்த மாத்திரைகள் வழங்கப்படும்.

இந்தப் பணியில் சுகாதார பணியாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், ஆஷா பணியாளா்கள் உள்பட 2,774 போ் ஈடுபட உள்ளனா் என்றனா்.

இந்த முகாமில், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பானுமதி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனுசாமி, மாநகராட்சி ஆணையா் ப.அசோக்குமாா், மாநகர நல அலுவலா் முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com