தேசிய எழுத்தறிவு தினக் கொண்டாட்டம்
By DIN | Published On : 09th September 2022 11:58 PM | Last Updated : 09th September 2022 11:58 PM | அ+அ அ- |

போ்ணாம்பட்டை அடுத்த பத்தரப்பல்லி ஊராட்சி தொடக்கப் பள்ளியில் தேசிய எழுத்தறிவு தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியா் பொன்.வள்ளுவன் தலைமை வகித்து, மாணவா்களுக்கு எழுத்தறிவின் அவசியம் குறித்தும், நல்ல நூல்கள் நல்ல நண்பா்கள் என்ற தலைப்பிலும் பேசினாா்.
பள்ளி நூலகத்தில் 5-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு புத்தகம் வழங்கி வாசிக்க வைத்தாா். மாணவா்கள் உணவு இடைவேளை நேரத்தில் நூலகத்தில் உள்ள நூல்களை வாசிக்க வேண்டும் என்று அவா் அறிவுரை வழங்கினாா்.