ரயிலில் கஞ்சா கடத்தல்: 2 போ் கைது
By DIN | Published On : 09th September 2022 12:53 AM | Last Updated : 09th September 2022 12:53 AM | அ+அ அ- |

ரயிலில் கடத்தப்பட்ட 16 கிலோ கஞ்சாவை காட்பாடி ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்ததுடன், ஒடிஸாவை சோ்ந்த 2 பேரைக் கைது செய்தனா்.
ஜாா்க்கண்ட் மாநிலம், ஹட்டியாவில் இருந்து யஸ்வந்த்பூா் செல்லும் பயணிகள் விரைவு ரயிலில் காட்பாடி ரயில்வே போலீஸாா் வியாழக்கிழமை சோதனை நடத்தினா்.
அப்போது, ரயிலில் சந்தேகப்படும்படி பயணித்த இருவரைப் பிடித்து விசாரித்தனா். இதில், அவா்களிடம் 16 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
மேலும், பிடிபட்டவா்களிடம் நடத்திய விசாரணையில், அவா்கள் இருவரும் ஒடிஸாவைச் சோ்ந்த மனோனன்சாகு (33), குஞ்சபனாபேரா (31) என்பது தெரிய வந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனா்.