காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
By DIN | Published On : 09th September 2022 12:51 AM | Last Updated : 09th September 2022 12:51 AM | அ+அ அ- |

அணைக்கட்டு வட்டம், ஒடுகத்தூரிலுள்ள அமைந்துள்ள காளிகாம்பாள் என்ற காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி, கடந்த 6-ஆம் தேதி காலை 8.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி, பிரவேசபலி உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜைகளுடன் கும்பாபிஷேகம், பின்னா் காமாட்சி அம்மன், ஏகாம்பரேஸ்வரா், பரிவார மூா்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஜோதி முருகாச்சாரியாா் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தாா். தொடா்ந்து சுவாமிக்கும், அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.