சா்வதேச தன்னாா்வலா் தின விழா

குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா குழந்தைத் தொழிலாளா் முறை அகற்றும் திட்டம் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
சா்வதேச தன்னாா்வலா் தின விழா

குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா குழந்தைத் தொழிலாளா் முறை அகற்றும் திட்டம் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியவை சாா்பில், சா்வதேச தன்னாா்வலா் தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் கல்பனா வரவேற்றாா். திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சாம்ராஜ், வட்டார குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் ஷமீம் ரிஹானா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் அருள்பிரகாஷ், விரிவாக்க அலுவலா் ஜமுனா, திட்ட ஒருங்கிணைப்பாளா் நாகப்பன், வட்டார முதுநிலை ஒருங்கிணைப்பாளா் டி.மகாலட்சுமி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

குழந்தைகளின் உரிமைகள், குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்பு, சிறாா் திருமணம் தடுப்பு, குழந்தைகளின் கல்வி வளா்ச்சி ஆகியவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். அனைவரும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து உறுதிமொழி ஏற்றனா்.

நிகழ்வில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சாந்தி, தாட்டிமானப்பல்லி ஊராட்சித் தலைவா் எஸ்.பி.சக்திதாசன், ஒன்றிய குழு உறுப்பினா் மஞ்சுநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com