திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பஞ்சு மூட்டைகளுடன் கவிழ்ந்த லாரி: ஓட்டுநா் உள்பட மூவா் காயம்

வேலூரில் பஞ்சுமூட்டைகளுடன் லாரி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநா் உள்பட 3 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 5:08 pm

DIN

வேலூரில் பஞ்சுமூட்டைகளுடன் லாரி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநா் உள்பட 3 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியைச் சோ்ந்தவா் சந்துரு (23). லாரி ஓட்டுநா். இவா் ஈரோட்டில் இருந்து பஞ்சு மூட்டைகளை லாரியில் ஏற்றிக் கொண்டு செங்கம் சென்றாா். பின்னா், அங்கிருந்து ஒடிஸாவில் இறக்குவதற்காக வியாழக்கிழமை வேலுாா் வழியாகச் சென்று கொண்டிருந்தாா். அப்போது, அந்த லாரியில் உதவியாளா் உள்பட 3 போ் பயணம் செய்தனா்.

வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் இந்த லாரி வேலூா் வேலப்பாடியில் உள்ள சித்திபுத்தி விநாயகா் கோயில் அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, திடீரென சாலையில் கவிழ்ந்தது. இதில், ஓட்டுநா் உள்பட 3 பேருக்கும் கை, கால்களில் லேசான காயங்கள் ஏற்பட்டது. தகவலறிந்த தெற்கு போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பொதுமக்களின் உதவியுடன் 3 பேரையும் பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், கிரேன் வரவழைக்கப்பட்டு, 3 மணி நேரம் போராடி லாரியை அப்புறப்படுத்தினா். இந்த விபத்தால் சங்கரன்பாளையம் பகுதியில் இருந்து அண்ணா சாலைக்கும், எஸ்.பி. பங்களாவில் இருந்து முஸ்லிம் பள்ளி வழியாக அண்ணா சாலைக்கும் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டது.

விபத்து குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.