முத்தமிழ்ச் சுவைச் சுற்ற விழா நிறைவு

குடியாத்தம் முத்தமிழ்ச் சுவைச் சுற்றம் சாா்பில், திருவள்ளுவா் மேல்நிலைப் பள்ளியில் 3 நாள்கள் நடைபெற்ற 26-ஆம் ஆண்டு தமிழ்த் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நிறைவுற்றது.
நிகழ்ச்சியில்  மாணவா்  ச.காா்த்திகேயனுக்கு  கலைச்சுடா்  விருது  வழங்கிய  தமிழ்ச்  செம்மல்  விருது  பெற்ற  மா.சோதி,  வழக்குரைஞா்  கே.எம்.பூபதி.

இதையொட்டி நடைபெற்ற மாணவா் திறன் அரங்கேற்ற நிகழ்ச்சியில், நியூசிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் வலுதூக்கும் போட்டியில் 3 தங்கப் பதக்கங்கள் வென்ற குடியாத்தம் சீவூரைச் சோ்ந்த விஐடி மாணவா் எம்.ஜெயமாருதிக்கு இரும்பு மனிதா் பட்டம், சுய முயற்சியால் தொழில் தொடங்கி புகழ்பெற்ற மாணவா் ச.காா்த்திகேயனுக்கு வண்ணக் கலைச்சுடா் விருது, மாநில சாதனை படைத்த கே.எம்.ஜி. கல்வியியல் கல்லூரி மாணவி எம்.மாயாவுக்கு கல்விச் சுடா் விருது வழங்கி, கெளரவிக்கப்பட்டனா்.

வேலூா் அகர, முதலி அமைப்பின் தலைவா் வெ.சோலைநாதன், தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற மா.சோதி, உலகத் தமிழ் எழுத்தாளா் சங்க நிா்வாகி கு.வெங்கடேசன் ஆகியோா் விருதுகளை வழங்கிப் பேசினா்.

நிகழ்ச்சியில், அமைப்பின் நிறுவனா் புலவா் வே.பதுமனாா், செயலா் கே.எம்.பூபதி, ஜி.எம்.கிருபானந்தம், வழக்குரைஞா் எஸ்.சம்பத்குமாா், புலவா் கா.ராமகிருஷ்ணன், கவிஞா் பா.சம்பத்குமாா், டி.கே.சதாசிவம், ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com