குடியாத்தம் அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதல்: 2 இளைஞர்கள் காயம்
குடியாத்தம் அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் 2 இளைஞர்கள் காயமடைந்தனர்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் ரயில்வே மேம்பாலம் அருகே வேலூரில் இருந்து குடியாத்தம் பரசுராமன் பட்டி அருகே அரசுப் பேருந்து வந்தபோது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல்போட்டுவிட்டு இரு இளைஞர்கள் பெட்ரோல் பங்கில் இருந்து அதிவேகமாக சாலையை கடக்க முயன்றனர். அப்போது இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
இதையும் படிக்க- பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்?
இதில் இருசக்கர வாகனத்தில் வந்த குடியாத்தம் அம்மணாங்குப்பம் துர்க்கை நகர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான ராஜலிங்கம் (வயது 20) மற்றும் அரவிந்த் குமார் (வயது 20) ஆகியோர் படுகாயம் அடைந்து குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து குடியாத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அரசுப் பேருந்து இரு சக்கர வாகனம் மீது மோதிய சிசிடிவி காட்சிகளால் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

