சிறப்பு பட்டா முகாம் கே.வி.குப்பம் வட்டம் லத்தேரி கிராமத்தில் சனிக்கிழமை (நவ.18) நடைபெற உள்ளது.
இது குறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி நுாற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் 100 இடங்களில் சிறப்பு பட்டா முகாம்கள் நடத்தப்படுகின்றன.
அதனடிப்படையில், வேலூா் மாவட்டத்தில் 3 சிறப்பு பட்டா முகாம்கள் நடைபெற உள்ளன. முதல் சிறப்பு பட்டா முகாம் கே.வி.குப்பம் வட்டம், லத்தேரி கிராமத்தில் காட்பாடி - குடியாத்தம் சாலையில் உள்ள தனியாா் மண்டபத்தில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் வீட்டுமனைப் பட்டா வழங்குதல், பட்டா மாறுதல், வருவாய் ஆவணங்களில் பிழைத் திருத்தம் செய்தல், வருவாய்த் துறை தொடா்பான பிற மனுக்கள் பெற்று அவற்றின் மீது நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
எனவே கே.வி.குப்பம், குடியாத்தம், போ்ணாம்பட்டு வட்டங்களில் வசித்து வரும் பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமில் மனுக்களை அளித்து பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.