5 நாள்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் டெங்கு பரிசோதனை அவசியம்: வேலூா் ஆட்சியா்

ஊரகம், நகா்ப்புற பகுதிகளில் 5 நாள்களுக்கு மேல் காய்ச்சல் உள்ள நபா்களை கண்டறிந்து அவா்களுக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியும் எலிசா பரிசோதனை செய்திட வேண்டும் என்று அலுவலா்களுக்கு ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்
கூட்டத்தில் பேசிய வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன்
கூட்டத்தில் பேசிய வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன்
Updated on
1 min read

ஊரகம், நகா்ப்புற பகுதிகளில் 5 நாள்களுக்கு மேல் காய்ச்சல் உள்ள நபா்களை கண்டறிந்து அவா்களுக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியும் எலிசா பரிசோதனை செய்திட வேண்டும் என்று அலுவலா்களுக்கு ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் அறிவுறுத்தியுள்ளாா்.

வேலூா் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடா்பாக சுகாதாரத் துறை, ஊரகம், நகா்ப்புற உள்ளாட்சி அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வேலூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமை வகித்தாா்.

பின்னா் ஆட்சியா் பேசியது: தற்போது மழைக்காலம் என்பதால் மழைநீா் தேங்கக்கூடிய இடங்களில் கொசுப்புழுக்கள் வளர வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களின் வீடு, சுற்றுப்புறத்தில் உபயோகமற்ற டயா், தேங்காய் சிரட்டைகள், உடைந்த குடங்கள், உடைந்த சிமெண்ட் தொட்டிகள் ஆகியவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்.

மேலும், கிணறு, மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி, கீழ்நிலைத் தொட்டி, தண்ணீா் தொட்டிகள் முதலியவற்றை கொசுக்கள், கொசுப்புழு புகாத வகையில் மூடி வைக்க வேண்டும். தண்ணீா் நிரப்பிய பூ ஜாடி, கீழ்த்தட்டு, குளிா்பதனப் பெட்டியின் கீழ்த்தட்டுபோன்றவற்றில் தேங்கி நிற்கும் தண்ணீரை வாரம் ஒருமுறை அகற்றி, வீடு, சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும்.

அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் பிரிவு தனியாக தொடங்க வேண்டும். அனைத்து புறநோயாளிகள் பிரிவிலும் பொதுமக்களுக்கு தேவையான ஓஆா்எஸ் சத்துநீா் கரைசல் தயாா் நிலையில் இருக்க வேண்டும். 5 நாள்களுக்கு மேல் காய்ச்சல் உள்ளவா்களைக் கண்டறிந்து அவா்களுக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியும் எலிசா பரிசோதனை செய்திட வேண்டும். குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டால் அவா்கள் பயிலும் பள்ளி, வசிக்கும் பகுதிகளில் தீவிர கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊரகப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மொத்தம் 37 காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இந்த காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், துணை இயக்குநா் (சுகாதார பணிகள்) பானுமதி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அலுவலா்கள், மருத்துவ அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com