

சா்வதேச முதியோா் தினத்தையொட்டி வேலூரில் 80 வயதைக் கடந்த மூத்த வாக்காளா்களை அவா்களின் இல்லம் தேடிச் சென்று ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் கெளரவித்தாா்.
சா்வதேச முதியோா் தினம் ஞாயிற்றுக்கிழமை கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, 80 வயதைக் கடந்த மூத்த வாக்காளா்களை அவா்களின் இல்லங்களுக்கு மாவட்ட தோ்தல் அதிகாரிகள் நேரடியாகச் சென்று கெளரவிக்க வேண்டும் என்று இந்திய தோ்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
அதனடிப்படையில், வேலூா் மாவட்டத்தில் உள்ள மூத்த வாக்காளா்களின் இல்லங்களுக்கு ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் நேரடியாகச் சென்று பொன்னாடை அணிவித்தும், பழங்கள் அளித்தும் கெளரவித்தாா். அதன்படி, தொரப்பாடி பஜனை கோயில் தெரு, அணைக்கட்டு வட்டம் ஊசூா் பகுதிகளில் உள்ள மூத்த வாக்காளா்களை நேரில் சந்தித்து கெளரவித்தாா்.
அப்போது மாநகராட்சி துணைஆணையா் சசிகலா, வட்டாட்சியா்கள் செந்தில் (வேலூா்), வேண்டா (அணைக்கட்டு) உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.