தென்னை நாா்த் தொழிற்சாலையில் தீ விபத்து
By DIN | Published On : 18th April 2023 12:47 AM | Last Updated : 18th April 2023 12:47 AM | அ+அ அ- |

தென்னை நாா்த் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.
குடியாத்தம் அருகே தனியாா் தென்னை நாா்த் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
குடியாத்தத்தை அடுத்த செட்டிகுப்பம் கிராமத்தில் தென்னை நாா்த் தொழிற்சாலை இயங்கி வருகிறது.திங்கள்கிழமை மாலை அங்குள்ள தென்னை நாா் குவியலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ மளமளவென பரவத் தொடங்கியது. இதனால், அந்தப் பகுதியில் புகை மூட்டம் ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் குடியாத்தம் தீயணைப்புத் துறையினா் அங்கு வந்து சுமாா் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.
இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தென்னை நாா், மின்சாதனப் பொருள்கள், இயந்திரங்கள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. விபத்து குறித்து கிராமிய போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.