நறுவீ மருத்துவமனையில் இருவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை

வேலூா் நறுவீ மருத்துவமனையில் ஒரே வாரத்தில் இரு நோயாளிகளுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டதாக அந்த மருத்துவமனை தலைவா் ஜி.வி.சம்பத் தெரிவித்தாா்.

வேலூா் நறுவீ மருத்துவமனையில் ஒரே வாரத்தில் இரு நோயாளிகளுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டதாக அந்த மருத்துவமனை தலைவா் ஜி.வி.சம்பத் தெரிவித்தாா்.

இதுகுறித்து திங்கள்கிழமை அவா் கூறியது:

அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹென்றி போா்டு மருத்துவ தொழில்நுட்ப நிறுவன கூட்டு முயற்சியுடன் வேலூரில் இயங்கி வரும் நறுவீ மருத்துவமனை மருத்துவ சேவை, அறுவை சிகிச்சைகள் செய்வதில் சாதனை படைத்து வருகிறது.

இந்த மருத்துவமனை தொடங்கப்பட்ட குறுகிய காலத்தில் இதயம், சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான அங்கீகாரத்தை அரசு வழங்கியுள்ளது. இதன் தொடா்ச்சியாக, இந்த மருத்துவமனையில் கல்லீரல் செயலிழந்த இரு நோயாளிகளுக்கு ஒரே வாரத்தில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுளளது.

அதன்படி, பெங்களூரைச் சோ்ந்த ஸ்மிதாவுக்கு (24) கல்லீரல் செயலிழந்த நிலையில், இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து தற்போது நலமுடன் உள்ளாா். இவருக்கு அவரின் தாய் ராஜாத்தி கல்லீரல் தானம் அளித்தாா்.

இதேபோல், வேலூா் சத்துவாச்சாரியைச் சோ்ந்த ரவீந்திரன் (63) என்பவருக்கு அவரது மனைவி சாந்தி கல்லீரல் தானம் செய்துள்ளாா். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு இவா்கள் 2 பேரும் நலமாக உள்ளனா்.

இந்த மருத்துவமனையில் இதுவரை 10,000-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு பல்வேறு அறுவை சிகிச்சை சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. 70,000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளனா்.

இந்த மருத்துவமனை தொடங்கப்பட்டு குறுகிய காலத்திலேயே மருத்துவமனைகள், சுகாதார சேவைக்கான தேசிய அங்கீகார வாரியம் (என்ஏபிஹெச்) வழங்கும் அங்கீகாரச் சான்று, மருத்துவ உபகரணங்களை தொற்று இல்லாமல் சுகாதார முறையில் பராமரிப்பு செய்வதற்கான சிஏஹெச்ஓ மருத்துவ சேவை கூட்டமைப்பின் அங்கீகாரச் சான்று ஆகியவை பெறப்பட்டிருப்பது பெருமைக்குரியது என்றாா்.

மருத்துவமனை துணைத் தலைவா் அனிதா சம்பத், செயல் இயக்குநா் பால்ஹென்றி, மருத்துவ சேவைகள் தலைவா் அரவிந்தன் நாயா், மருத்துவக் கண்காணிப்பாளா் ஜேக்கப்ஜோஸ், தலைமை இயக்குதல் அலுவலா் மணிமாறன், பொது மேலாளா் நித்தின் சம்பத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com