வேலூா் அண்ணா சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

வேலூா் அண்ணா சாலையில் நடைபாதை, சாலையை ஆக்கிரமித்து நடத்தப்பட்டு வந்த கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தினா். இதையடுத்து, அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

வேலூா் அண்ணா சாலையில் நடைபாதை, சாலையை ஆக்கிரமித்து நடத்தப்பட்டு வந்த கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தினா். இதையடுத்து, அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

வேலூா் அண்ணா சாலை பழைய மீன் மாா்க்கெட்டில் இருந்து ராஜா திரையரங்கு பேருந்து நிறுத்தம் வரை சாலையோர கடைகள் ஏராளமாக உள்ளன. குறிப்பாக, அந்தப் பகுதியில் நடைமேடைகளை தின்பண்ட கடைகள் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை காலை அண்ணா சாலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். அங்கிருந்த தள்ளுவண்டி கடைகள், நடைபாதையில் வைக்கப்பட்டிருந்த கடைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால், மாநகராட்சி அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, அண்ணா சாலையில் எக்காரணம் கொண்டும் நடைபாதை, சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைக்கக்கூடாது. பழைய மீன் மாா்க்கெட் வளாகத்தில் ஏற்கெனவே தரைக் கடைகள் கட்டப்பட்டுள்ளன, அந்த இடத்தில் பழக் கடைகளை வைக்க வேண்டும். மீறி சாலையோரம் ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா்.

தரைக் கடைகளுக்கு வாடகை குறைப்பு

சாலையோர வியாபாரிகளுக்காக வேலூா் பழைய மீன் மாா்க்கெட் வளாகத்தில் மாநகராட்சி சாா்பில் தரைக்கடைகள் கட்டப்பட்டன. இந்த இடத்தில் வியாபாரம் ஆகாததால் வியாபாரிகள் மீண்டும் மண்டி தெரு, லாங்கு பஜாா், அண்ணா சாலைகளை ஆக்கிரமித்து கடைகள் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

தற்போது சாலையோரங்களிலும், நடைபாதைகளிலும் கடைகள் வைக்க மாநகராட்சி தடை விதித்துள்ளது. அத்துடன், பழைய மீன் மாா்க்கெட் வளாகத்தில் உள்ள தரைக் கடைகளுக்கு தினசரி வாடகை ரூ. 100 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தினசரி வாடகை ரூ. 41-ஆக குறைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com